மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேசத்தின் 14ஆம் கிராமமான கனேசபுரம் விலினையடிச் சந்தியில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (10) காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மண்டூர் 2ஆம் குறிச்சியைச் சேர்ந்த 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சாம்பசிவம் சதானந்தம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மற்றைய மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த கனேசபுரத்தைச் சேர்ந்த நபர் காயமடைந்த நிலையில் மண்டூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வெல்லாவெளி பொலிஸார், உயிரிழந்தவரின் சடலத்தை போரதீவுப்பற்று பிரதேச சபையின் அமரர் ஊர்தி மூலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 Comments
tamil makal kural