முஸ்லிம் மக்களை உதாரணமாக கொண்டு பட்டிருப்பத் தொகுதி மக்கள் செயற்பட வேண்டும். - அமைப்பாளர் சாணக்கியன்

முஸ்லிம் மக்களை உதாரணமாக கொண்டு எதிர்காலத்தில் பட்டிருப்பத் தொகுதி மக்கள் செயற்பட வேண்டும். -  அமைப்பாளர் சாணக்கியன்


(பிரணி)

இலங்கையிலே தனித் தமிழ் தேர்தல் தொகுதியாகக் காணப்படுவது மட்டக்களப்பிலே அமைந்துள்ள பட்டிருப்பு தேர்தல் தொகுதிதான் தற்போது பார்த்தால் முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தி கண்டு வருகின்றன எனவே முஸ்லிம் மக்களை உதாரணமாக வைத்துக் கொண்டு எதிர் காலத்தில் நமது மக்கள் குறிப்பாக பட்டிருப்பத் தொகுதி மக்கள் செயற்பட வேண்டும்.


என  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம்  தெரிவித்துள்ளார்.

நேற்று (11.12.2014 ) மட்.களுவாஞ்குடி பிரதேசத்தின் மகிளுர் கிராமத்தில் நடைபெற்ற ஒளி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேதான் அவர் இவ்வாறு தெரிவித்தார்.


மகிளுர் சிறுவர் சமுக அபிவிருத்தி அமைப்பின் திட்ட முகாமையாளர் அ.சௌந்தராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேதான் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்குகையில்

இந்த இடத்தில் கூடியிருக்கும் மாணவர்களைப்போலும் , அவர்களின் கலை நிகழ்வகளைப்போலும் , நான் வேறு எங்கும் காணவில்லை இவ்வாறு திறமையான மாணவர்கள் கொண்ட இந்த பட்டிருப்புத் தொகுதியில் எந்த விதமாக அபிவிருத்திகளும் இதுவரையில் நடைபெறவில்லை என்பதனையிட்டு மிகவும் கவலையாகவுள்ளது.

எனக்கு இப்போதுதான் 23 வயது எனவே இப்பகுதி மாணவர்களின்தும், சிறார்களினதும் , இளைஞர் யுவதிகளினதும், எனைய மக்களினதும், தேவைகள் என்ன என்பதனை எனக்கு யாரும் சொல்லி அறிய வேண்டியதில்லை எனவே மக்களுக்கான சேவைகளை எனது பல திட்டங்களுடாக பல அபிவிருத்திகளை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளேன்.


நான் எனது கல்வியினை ஆங்கில மொழியிலேதான் கற்றேன் அந்த வகையில் மாணவர்களின் நலன் கருதி இலவசமாக ஆங்கிலம் கற்பிக்கவும் திட்டமிட்டுள்ளேன். இதற்கு நான் இராசமாணிக்கம் பவுண்டேஷனூடாக உதவிகளை மேற்கொள்ளவுள்ளேன்.

பட்டிருப்புத் தொகுதியில் உள்ள பெண்களின் அபிவிருத்தியினை உயர்த்துவதற்காக விசேடமான திட்டம் ஒன்றினை முன்வைக்கவுள்ளேன். அதற்கா வேண்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் பெண்களின் சுய தொழில்களுக்கு வட்டியில்லாத கடன் களை வழங்குவதாக சொல்லப் பட்டுள்ளது. 

அதே வேளை இப்பகுதியில் தொழில் பேட்டை ஒன்றை அமைக்கவும் நாம் திட்டமிட்டுள்ளோம் அதனையும் நான் உங்களுக்கு நிச்சயம் பெற்றுத்தருவேன். இதன்மூலம் பெண்கள் வாழ்வாதார ரீதியில் முன்னேற்றமடைய  சிறந்த சந்தர்ப்பமாக அமையும். இதையெல்லாம் அரசாங்கத்தால் அதாவது ஆளும் கட்சியால் மட்டும்தான் எமது மக்களுக்கு வழங்க முடியும்.


இலங்கையிலே தனித் தமிழ் தேர்தல் தொகுதியாகக் காணப்படுவது மட்டக்களப்பிலே அமைந்துள்ள பட்டிருப்பு தேர்தல் தொகுதிதான் , முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தி கண்டு வருகின்றன எனவே முஸ்லிம் மக்களை உதாரணமாக வைத்துக் கொண்டு எதிர் காலத்தில் நாம் அனைவரும் செயற்பட வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.














Post a Comment

0 Comments