காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு மேற்கு - காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா 


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள மட்/மமே/காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (27) பாடசாலை அதிபர் செ. பரா தலைமையில் நடை பெற்றது

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி. சி. கங்கேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.

கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் அதிகூடிய மாணவர் வரவு, பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் , கல்வியற் கல்லூரிக்கு தெரிவான மாணவன் சாதனை மாணவர்களின் பெற்றோர்கள், சாதனை ஆசிரியர்கள்,பாடசாலைக்கு காணியை நன்கொடையாக வழங்கியவர், பாடசாலை ஆரம்பிப்பதற்கு உழைத்த பெருந்தகைகள்,பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளராக சேவை புரிந்தவர்கள் என சுமார் 200 இற்கும் மேற்பட்ட சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த சிறப்புமிக்க நிகழ்வானது பாடசாலைச் சமூகத்தினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது







Post a Comment

0 Comments