மட்டக்களப்பில் அதிரடியாக இடம் பெற்ற பயணிகள் பேருந்து போக்குவரத்து அனுமதிப்பத்திரம் பரிசோதனை
கிழக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் பயணிகள் போக்குவரத்து பேருந்து அனுமதிப்பத்திரம் பரிசோதனை மேற்கொள்ளும் நடமாடும் சேவை கிழக்கு மாகாணத்தில் பல பாகங்களில் நடைபெற்று வருகின்றது
இதன் ஒரு நடவடிக்கையாக மட்டக்களப்பில் நேற்று இரவு அதிரடியாக விசேட பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது
மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸ் அதிகாரி எஸ். குணதிலக உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மற்றும் கிழக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் செயற்பாடு திட்டமிடல் பணிப்பாளர் பிரபாத் கொடகமகே தலைமையிலான பரிசோதனை அதிகாரிகளால் இந்த பயணிகள் போக்குவரத்து அனுமதி பத்திரப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது போக்குவரத்து சேவை அனுமதிப் பத்திரம் இல்லாமல் பயணித்த பேருந்துகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அத்துடன் அங்கிகரிக்கப்பட்ட நடைமுறைக்கு முரணாக பயணச் சேவையை மேற்கொண்ட பேருந்துகளின் அனுமதிப் பத்திரம் மீள் பரிசீலனைக்காக பெறப்பட்டுள்ளது
சட்டபூர்வமான பயணிகள் போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த விசேட செயல்திட்டம் தாம் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுத்து வருவதாக வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்



0 Comments
tamil makal kural