மட்டக்களப்புப் பொது நூலக வாசகர் வட்டம் மாதாந்தம் காத்திரமான நூல்களை அறிமுகப்படுத்தி உரையாடும் ஒரு நிகழ்ச்சியை மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் மட்டக்களப்புப் பொது நூலகத்தில் நடத்தத் தொடங்கியுள்ளது.
இந்தவகையில் இந்த ஆகஸ்ட் மாதத்திற்கான நூல் அறிமுகமும் உரையாடலும் எதிர்வரும் 30.08.2026 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தமாதம், மட்டக்களப்பு வந்தாறுமூலையைச் சேர்ந்த ஓய்வுநிலை அதிபர் திரு குமாரசாமி சண்முகம் அவர்கள் எழுதியுள்ள "களுவன்கேணி வேடுவப் பரம்பரையினரின் வழக்காறுகள்" என்ற ஆய்வு நூல் அறிமுகஞ் செய்யப்படவுள்ளது.
கிழக்குப்பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை விரிவுரையாளரான திருமதி பிரசாந்தி இளங்கோ அவர்கள் இந்நூலை அறிமும் செய்யவிருக்கிறார்.
மட்டக்களப்புப் பொது நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு த. யுவராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக் காத்திரமான நூலறிமுக நிகழ்ச்சிக்கு ஆர்வமானவர்களை வருக வருக என வாசகர் வட்டத்தினர் அழைக்கிறார்கள்.
0 Comments
tamil makal kural