அம்மை அப்பன் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தின் கட்டடப் பணிகள் ஆரம்பம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 9400 மாற்றுத் திறனாளிகள் உள்ளார்கள்,
எஸ்.சதீஸ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 9400 மாற்றுத் திறனாளிகள் உள்ளார்கள், அம்மை அப்பன் மாற்றுத்திறனாளிகள் இல்லம் எமது மாற்றுத்திறனாளிகளுக்காக எமது மக்களால் கட்டப்படும் இந்த இல்லத்தின் கட்டிடப் பணிகள் ஆரம்பித்துவிட்டன.என தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளர் சாரங்கபாணி அருள்மொழி தெரிவித்தார்.
மட்டக்களப்பில் மாற்றுதிறனாகளுக்கா வேண்டி அமைக்கப்பட்டுவரும் அம்மை அப்பன் இல்லம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை(31.07.2027) மட்டக்களப்பு கல்லயிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..
இந்த இல்லத்தில் 24 அறைகள், ஒவ்வொரு அறைக்கும் தனிக் குளியலறை, மையத்தில் ஒரு மண்டபம், நாட்சியார் அமைப்பில் மைய கட்டிடம், மருத்துவ அறை, அலுவலகம் ஆகியவற்றுடன், மாடியிலிருந்து அழகிய கடற்கரையையும் மைதானத்தையும் இரசிக்கக்கூடிய வகையில் இந்தக் கட்டிடம் கட்டப்படுகிறது.
50 மாற்றுத்திறனாளிகள் தமது துன்பமான காலத்தில் இந்த அம்மை அப்பன் இல்லத்திற்கு வந்து தங்கி, தம்மைத் தேற்றிக் கொண்டு, மீண்டும் சமூகத்தோடும் தங்கள் குடும்பத்தோடும் இணையும் வழிவகைகள் இந்த இல்லத்தில் செய்யப்பட்டிருக்கும். அவர்களுக்கான உணவு, மருத்துவ வசதிகள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கும் வகையில் இந்த இல்லம் நடத்தப்படும்.
இந்த இல்லம் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்துத் திணைக்களங்களிலிருந்தும் அனுமதியும், தடையில்லாச் சான்றிதழ்களும் பெறப்பட்டுள்ளன. இதைப் பகிரங்கமாக டெண்டர் முறை மூலம், கட்டுவதற்கான ஒப்பந்தக்காரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அதன்படி, இந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது ஊர் கூடி இழுக்கும் தேர்; அனைவரது அன்பினாலும், நிதி உதவியினாலும், ஆக்கத்தினாலும்தான் இந்தக் கட்டிடம் கட்டப்பட முடியும். அனைவரும் இந்தக் கட்டிடப் பணியில் வந்து இணையுமாறு அன்போடு கேட்டுக்ககொள்கிறோம்.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் யுத்தத்தால் பாதிப்படைந்து மாற்றுத்திறனாளிகளாக்கப்பட்ட எமது சகோதர சகோதரிகள் சிலரின் கஷ்டங்கடள அறிந்துகொண்ட எமது புலம்பெயர் உறவுகள் தமிழ் பரா ஸ்போர்ட்ஸ் (வுயஅடை Pயசய ளுpழசவள) எனும் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனம் இங்கிலாந்திலும், டேட்டா சரிடி எனும் அரசு சாரா நிறுவனம் இலங்கையிலும் பதிவு செய்யப்பட்டு நன்கெடைடயாளர்களிடமிருந்து உதவிகளைப் பெற்று மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காகவும், நிலையான வாழ்விற்காகவும் மாற்றுவதற்கு ஒரு பாலமாக செயற்பட முன்வந்தது. இந்த இல்லத்தில் 2028 தை மாதத்தில் மாற்றுத்திறனாளிகளை உள்வாங்கும் இலக்கோடு நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
என அவர் இதன்போது தெரிவித்தார்.






0 Comments
tamil makal kural