ருத்திரன்
மட்டக்களப்பு, கிரான் ஜோபியல் சிறுவர் விளையாட்டு கழகத்தின் 4 ஆவது வருடாந்த விளையாட்டு நிகழ்வு கிரான் கருணா ஜக்கிய கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
வாழைச்சேனை சேகரத்தின் குருவானவரும் திட்டத்தின் பணிப்பாளருமான கே.எஸ்.நிஷாந்தன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கிரான் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி லோகினி விவேகானந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
குறித்த விளையாட்டு நிகழ்வில் சிறுவர்களுக்கான அறிவியல் விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் உடற்பயிற்சி கண்காட்சி என்பனவும் நடைபெற்றது.அத்துடன் நடுவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விசேட விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
பைசோன்.ஜப்பிராட்ஸ்.
கீகோன் என உலகின் பிரசித்தி பெற்ற நதிகளின் பெயர்களைக் கொண்ட இல்லங்கள் அலங்காரம் செய்யப்பட்டு அவற்றிக்கிடையே போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டது.
தேசிய கீதம் இசைக்கப்பட்டு கொடிகள் ஏற்றப்பட்டு .ஒலிம்பிக் தீபம் ஏற்றி நிகழ்வுகள் யாவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.





0 Comments
tamil makal kural