மட்டக்களப்பில் கடந்த1988 படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை சந்திரா அடிகளாரின் 38ஆவது ஆண்டு அஞ்சலி அனுஷ்டிப்பு
வவுணதீவு நிருபர்
மட்டக்களப்பில் கடந்த1988 ஆம் ஆண்டு ஆயுததாரிகளால் சுட்டுக் படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு மட்டக்களப்பில் சனிக்கிழமை (06) இடம் பெற்றது
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தபோது, அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் துணிச்சலுடன் குரல் கொடுத்ததுடன் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆவணப்படுத்துவதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற்பதிலும் முக்கிய பங்காற்றியவர் அருட்தந்தை சந்திரா அடிகளார்
கடந்த1988 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 06 ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து, ஆயுதக்குழு ஒன்றினால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அருட்தந்தை சந்திரா அடிகளாருக்கு அஞ்சலி அலுஷ்டிப்பு மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் பேராலய வளாகத்தில் அமைந்துள்ள அடிகளாரின் சமாதியில் நடை பெற்றது



0 Comments
tamil makal kural