மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவில் மே 18 முள்ளிவாய்கால் நினைவு நாள் அனுஷ்டிப்பு
எஸ். சதீஸ்
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் முள்ளிவாய்கால் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டதுடன் அதன் நினைவாக கசிசி வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது
தமிழரசு கட்சியின் பிரதேச கிளையின் ஏற்பாட்டில் மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் த. கோபாலப்பிள்ளை தலைமையில் வவுணதீவில் திங்கள்கிழமை (18) இந்நிகழ்வு நடைபெற்றது
இதன் போது, முள்ளிவாய்காலில் உபிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அதன் நினைவாக முள்ளிவாய்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது
இதில் தமிழரசு கட்சி உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.





0 Comments
tamil makal kural