மதுபாவனைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்கும் "உவகை" இன் ஒரு வருட நிகழ்வும் கெளரவிப்பும்!

 


மதுபாவனைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்கும்  செட்டிபாளயம் "உவகை"  இன் ஒரு  வருட நிகழ்வும் கெளரவிப்பும்! 


வவுணதீவு நிருபர்

மதுபாவனைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்கும் மட்டக்களப்பு பிராந்திய நிலையமான செட்டிபாளயத்தில்  இயங்கும்   "உவகை"  இன் ஒரு  வருட நிகழ்வும் கெளரவிப்பும்  திங்கட்கிழமை (20.07.2026 ) மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.


இன் நிகழ்வு, பிராந்திய மனநல வைத்திய  அதிகாரி வைத்தியர் எஸ். டான் சௌந்தரராஜாவின் ஒருங்கமைப்பில்
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரனின் தலைமையில் நடை பெற்றது

மனநலம் மற்றும் உள-சமூக நல்வாழ்வை மேம்படுத்தும் பணிகளில் அர்ப்பணிப்புடனும் சிறப்புடனும் சேவையாற்றி வரும் செட்டிப்பாளையம் பிராந்திய மதுபான புனர்வாழ்வு நிலையத்தின் பணியாளர்களை கௌரவிக்கும் நோக்கில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் அடங்கலான 10 பேருக்கு விருது வழங்கப்பட்டது


 இந்நிகழ்வில், சுகாதார வைத்திய அதிகாரியும் மனநல சிகிச்சையாளருமான வைத்தியர் அனுசியா ஸ்ரீசங்கர்,  செட்டிப்பாளையம் பிராந்திய மதுபான புனர்வாழ்வு  நிலையப் பொறுப்பதிகாரி வைத்தியர் கனகசிங்கம் அருள்யோதி, தாதிய உத்தியோகத்தர்கள், மற்றும்  பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனை பொறுப்பு வைத்திய அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


 தொடர்ந்து தடை பெற்ற நிகழ்வில்,  செட்டிப்பாளையம் பிராந்திய மதுபான புனர்வாழ்வு நிலையத்தின் சேவைகள் மற்றும் சாதனைகளை விளக்கும் சுருக்கமான  அறிமுகம் இடம்பெற்றதுடன் மனநல மேம்பாடு மற்றும் உள-சமூக தலையீடுகள் மூலம் நிறுவனத்தின் திறனை வலுப்படுத்திய பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் பாராட்டு விருதுகள் வழங்கப்பட்டது.











Post a Comment

0 Comments