ருத்திரன்                      

தேசிய வேலைத் திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வவானது  இன்று (30) கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. 

வாகரை பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்திபன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில்  தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கான ரூபா  பத்து லட்சம் பெறுமதியான காசோலை முதற் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பிரபு . மட்டக்களப்பு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் த.சுபாஸ்கரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வாகரை பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.