சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர் கெளரவிப்பும் பல்கலை கழகம் தெரிவான மாணவர்களுக்கு பாராட்டும்!

மட்டக்களப்பில் சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கெளரவிப்பும் பல்கலை கழகம் தெரிவான மாணவர்களுக்கு பாராட்டும் நிகழ்வு!


வவுணதீவு நிருபர் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒய்வு பெற்றுச் செல்லும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி நலன்புரி சங்க உறுப்பினர்களின் பல்கலைக் கழக அனுமதி பெற்ற  மாணவர்களை பாராட்டும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி நலன்புரிச் சங்கத்தின் தலைவர் என்.ரவீந்திரகுமார் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லா காலாசார மண்டபத்தில் சனிக் கிழமை (14.02.2026)  இடம் பெற்றது.

சமுர்த்தி நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். ராஜ்பாபு, பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வில் கெளரவிப்புக்கு அழைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற மற்றும்  இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச்சின்னத்துடன் பணமும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்

தொடர்ந்து சமுர்த்தி நலன்புரி சங்க உறுப்பினர்களின் பல்கலைக் கழக அனுமதி பெற்ற  பிள்ளைகளுக்கு அதிதிகள் வாழ்த்தி நினைவுப் பரிசும், பணப் பரிசும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் நலன்புரி சங்கத்தினர், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



















Post a Comment

0 Comments