இங்கிலாந்து ஒக்ஸ்போட்டில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் கொன்றொழிக்கப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ் உறவுகளின் 17-ஆவது ஆண்டு நினைவு தினம், 18 மே (18.05.2026) அன்று  இங்கிலாந்தில் ஒக்ஸ்போட்டிலுள்ள  உலக தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழினப் படுகொலை நினைவுத்தூபியில் பிரதான பொதுச் சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன்  தொடங்கப்பட்டன.

பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஈழத்தில் உயிர்நீத்த  ஆயிரக்கணக்கான உறவுகளுக்கு புலத்திலுள்ள உறவுகள் எனப் பலரும் நினைவுத்தூபியில் மலர் தூவி, சுடரேற்றிக் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியதோடு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.









Post a Comment

0 Comments