ருத்திரன் -
உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு வீதிகளை சுத்தப்படுத்துதல் வேலைத்திட்டமானது பிரதான கொழும்பு வீதியின் நாவலடி சுற்றுவட்டம் தொடக்கம் றிதிதனை வரை இன்று (4) மேற்கொள்ளப்ட்டது.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை வாகரை ஆகியன இணைந்து தத்தமது எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரு மருங்கிலும் காணப்பட்ட திண்மக் கழிவுப் பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். நீண்ட காலமாக குறித்த வீதியில் போக்குவரத்து செய்வோர் குடியிருப்பாளர்கள் பெருமளவான கழிவுப் பொருட்களை வீசியுள்ளனர்.அவை பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருந்த நிலையில் இரு பிரதேச சபை ஊழியர்கள்,பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அவற்றினை அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டனர். குறித்தொடுக்கப்பட்ட இடங்கள் தவீர்ந்த வீதிகளில் மற்றும் பொது இடங்களில் அனுமதியின்றி குப்பை போடுகிறவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளர் க.தெய்வேந்திரன் ஓட்டமாவடி பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எச்.நுபைல் மற்றும் சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


0 Comments
tamil makal kural