மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல்


- எஸ் . சதீஸ்                

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் பாடசாலை மண்டபத்தில் இன்று புதன் கிழமை ( 08.07.2026 ) அன்று நடை பெற்றது


இலங்கை பாராளுமன்றம் மற்றும் தேர்தல் உரிமை, வாக்களிப்பு முறை, அரசியல்  தொடர்பில் மாணவர்களுக்கு தெளிவு படுத்தி கற்றல் செயற்பாட்டை மாணவர்களுக்கு ஊட்டும் வகையில் இந்த மாணவர் பாராளுமன்ற தேர்தலில் சிறப்புடன் நடை பெற்றது


இந்த வாக்களிப்பு நிகழ்வில் தேர்தல் ஆணையாளராக பாடசாலை அதிபர் கே. பகீரதன் கலந்து சிறப்பித்தார்

இதன் போது 45 உறுப்பினர்கள் தெரிவு செய்வதற்காக இத்தேர்தலில் 90 பேர் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது











Post a Comment

0 Comments