கிழக்கிலங்கையிலிருந்து இலங்கைத் தேசிய அரசியலில் கனதியான தாக்கங்களை ஏற்படுத்திய மூத்த அரசியல்வாதியும் கல்வியியலாளருமாகிய அமரர் நல்லையா அவர்களின் நினைவாகக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடம் ஆண்டு தோறும் நடத்தி வருகின்ற நல்லையா நினைவுப் பேருரைத் தொடரின் ஆறாவது பேருரை எதிர்வரும் 28.10.2026 ஆந் திகதி புதன்கிழமை பிற்பகல் 02:00 மணிக்கு வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் க. சுரேஸ் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ப. பிரதீபன் அவர்கள் பங்குபற்றிச் சிறப்பிக்கவுள்ளார்.இவ்வாண்டிற்கான நினைவுப் பேருரையினை தமிழ் கற்கைகள் துறையின் பேராசிரியரான சி. சந்திரசேகரம் அவர்கள் “தன்வரலாற்று எழுதியலும் ஈழத்துத் தமிழ் தன்வரலாறுகளின் சமூகப் பெறுமானமும்” என்ற தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.ஆர்வலர்களை ஏற்பாட்டுக் குழுவினர் அன்போடு அழைக்கின்றார்கள்.

0 Comments
tamil makal kural