மகா சிவராத்திரியை முன்னிட்டு மட்டக்களப்பில் " தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்" இந்திய பாடகர் உன்னிகிருஷ்ணன் கலந்து கொள்ளும் நிகழ்வு

மகா சிவராத்திரியை முன்னிட்டு மட்டக்களப்பில் " தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்"  இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் கலந்து கொள்ளும் மாபெரும் தெய்வீக இசை நிகழ்வு


எஸ்.சதீஸ்  -     

மட்டக்களப்பில் மகா சிவராத்திரியினை முன்னிட்டு பிரபல இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்கும் "தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்"  இசை நிகழ்ச்சி எதிர்வரும் 17ம் திகதி செவ்வாய்கிழமை இடம் பெறவுள்ளது.

இது தொடர்பான  ஊடக சந்திப்பு நேற்று ஞாயிற்றுக் கிழமை (8ம் திகதி) மட்டக்களப்பு   மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தில் இடம்பெற்றது.

பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் தலைமை இணைப்பாளர் வீ.கே.சுரேந்திரன் கலந்து கொண்டு ஊடக சந்திப்பினை நடாத்தியிருந்தார்.

புகழ் பெற்ற இந்திய பாடகர் பீ. உன்னிகிருஷ்ணன் மற்றும் அவரது மகள்  உத்தரா உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்குகொள்ளும் 

இசை நிகழ்ச்சியில் ஆன்மீக பேச்சாளராக இந்தியாவில் இருந்து வருகை தரும்   தெய்வீக சகோதரி பி.கு.உமா அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

மேலும் மகா சிவராத்திரியினை முன்னிட்டு எதிர்வரும்  14, 15, 16ம்  திகதிகளில் கல்லடி கடற்கரையில் 12 ஜோதிலிங்க தரிசனமும் இடம்பெறும்.

இசை நிகழ்ச்சி எதிர்வரும்  17.02.2026 திகதி (செவ்வாய்கிழமை) மாலை  6.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணி வரைக்கும் இடம் பெறும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

 










Post a Comment

0 Comments