மாதவிடாய் பாகுபாடு என்பது ஒரு வகை பாலின அடிப்படையிலான வன்முறையே !

எமது நாட்டில் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருகிறது. இந்த சமூகத்தில் பெண்களை பற்றிய புரிதல் குறிப்பாக மாதவிடாய் பற்றிய போதிய அறிவு இல்லாதோர் உள்ளனர்  இவ்வாறான சமூகத்தின் மத்தியில் தான் வன்முறைகளும் ஆண் பெண் பாகுபாடும் காணப்படுகின்றது.

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு மாதவிடாய்ப் பாகுபாடு ஒரு காரணமாக இருக்கக் கூடாது.

பொதுவாக பெண் பிள்ளைகள்  தனிமைப்படுத்தப்படுவதும், ஒதுக்கப்படுவதும் அவர்கள் வாழும் வீடுகளில் இருந்தே ஆரம்பிக்கப்படுகின்றது.

இதற்கு மாதவிடாய் எனும் ஒரு சாதாரண விடயம் காரணமாக அமைந்து விடுகின்றது.

இந்த சாதாரண விடயம் பெண்களை உள ரீதியாக வெகுவாக பாதிக்க செய்கிறது.

இது சாதாரண விடயம் என்று புரியாத பலர்  எம் மத்தியில் இன்னும் உள்ளனர். இந்த புரிதல் இல்லாத காரணத்தால் பாலின அடிப்படையில் பெண்களே பாதிப்படைகின்றனர். அதே சமயம் அப்பெண்களின் உரிமையும் மறுக்கப்படுகின்றது.

ஆண், பெண் இரு பாலாரின் அன்றாட வாழ்வில் மாதவிடாய் எனும் ஒரு காரணத்தினால் பெண்களே பல வகையிலும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். காரணம் மாதவிடாய் பற்றிய போதிய புரிதல் இல்லாமையே,

மாதவிடாய்ப் பாகுபாடு என்பது ஒரு வகை பாலின அடிப்படையிலான வன்முறையாகும்

மாதவிடாய் குறித்த சமூகத் தடைகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லாமை, மற்றும் பொருட்கள் கிடைக்கப்பெற்ற பெறாமை உள்ளிட்ட பல காரணங்களால் பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதிக்கிறது. இது கல்வி, சுகாதாரம் மற்றும் கண்ணியமாக வாழ்வதற்கான உரிமைகளைப் பறித்து,

  • சமூகத்தடைகள் மற்றும் களங்கம்:  மாதவிடாய் காலத்தை அசுத்தமாகக் கருதி, பெண்கள் சமூகச் செயல்பாடுகளில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள், இது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
  • கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இழப்பு: பாடசாலை அல்லது வேலைக்குச் செல்ல முடியாமை காரணமாக, பெண்களின் சுதந்திரம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது.

  • உளவியல் தாக்கம்: இத்தகைய பாகுபாடுகள் தாழ்வு மனப்பான்மை மற்றும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகின்றன. 


தடுப்பு மற்றும் தீர்வுகள்:
  • மாதவிடாய் சுகாதாரம்  குறித்து சமூகத்தில் அனைவரும் விழிப்படைய வேண்டும்.
இச்செயற்பாட்டினை விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தின் முன்னெடுத்து வருவதனை காணக கூடியதாக உள்ளது.


மற்றும் 
  • சுகாதாரப் பொருட்கள் மற்றும் வசதிகளை எளிதாகக் கிடைக்கச் செய்தல்.
  • மாதவிடாய் தொடர்பான சமூகக் களங்கங்களைக் களைதல்.

இவை பாலின சமத்துவத்தை நிலைநிறுத்தவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் தடுக்கவும், குறைக்கவும் உதவும்.

எதிர்காலத்தையும், எதிர்கால சந்ததிகளை  உருவாக்கும் பாரிய பொறுப்பிலிருக்கும் ஒரு பெண்ணின் உடல் ஆரோக்கியம் மிக மிக முக்கியமானது ஆகையால் பெண்களின் மாதவிடாய் என்பது ஒரு சாதாரணமானது. இது தூற்றுவதற்கான காரியமல்ல, இது மதிக்கப்பட வேண்டிய காரியம் என்பதை இச்சமூகம் மனதில் கொள்ள வேண்டும்.

ச.சதீஸ்குமார் ( ஊடகவியலாளர் )


   






 

Post a Comment

0 Comments