ஊடகவியலாளர் தேவராசாவின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு



கடந்த 1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்ட முதலாவது ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை தேவராசாவின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று (25) காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பு 'வொயிஸ் ஒஃப் மீடியா' ஊடகக் கற்கைகள் வள நிலையத்தில் நடைபெற்றது. 


கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் தலைவரும் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான க.சரவணன் தலைமையில், கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் செயலாளர் உ.உதயகாந்த் (ஜே.பி.) அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. 

இதன்போது, மறைந்த ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு. இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 
நன்றி - சமூக ஊடகம்




Post a Comment

0 Comments