மட்டக்களப்பு, பட்டிப்பளையில் பெரன்டினா நிறுவனத்தின் அனுசரணையில் நிலை அடிப்படையில் இடம் பெறும் வன்முறைக்கு எதிரான 16 நாள் செயல்திட்டம் !
மட்டக்களப்பு, மண்முனை தென் மேற்கு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் பெண்களுக்கு எதிரான வண்முறையை தடுக்கும் பால் நிலை அடிப்படையில் இடம்பெறும் வன்முறைக்கு எதிரான 16 நாள் செயல்திட்ட இறுதி நிகழ்வு இன்று 11-12-2025ம் திகதி மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் நடை பெற்றது.
பிரதேச செயலாளரின் திட்டமிடலில் , பெண்கள் அபிவிருந்தி உத்தியோகத்தர் ரி.கெளசல்யாவின் ஒழுங்குபடுத்தலில் இந்நிகழ்வு நடை பெற்றது.
பெரன்டினா அமைப்பின் அனுசரணையுடன் இடம் பெற்ற இந் நிகழ்வின் போது பால் நிலை, சமத்துவம் தொடர்பில் விழிப்பூட்டல் கருத்தரங்கும் இடம் பெற்றது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்
எஸ். பார்த்தீபன், பெரன்டினா நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எஸ். டினேஸ், கண்காணிப்பு உத்தியோகத்தர் எம்.பி. பவிக்காந் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
இந்நிகழ்விலும் விழிப்பூட்டல் கருத்தரங்கிலும் சுமார் 50 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர், பெரன்டினா நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர், உள நல உத்தியோகத்தர் கல்வித் திணைக்கள தொழில்.வழிகாட்டல் மற்றும் ஆலோசகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






0 Comments
tamil makal kural