மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி வலயத்தில் குருளைச் சாரணர், சாரணர்களுக்கான கலைக் கூறு இரண்டு பயிற்சி இன்று மாலை நிறைவு பெற்றது.
கன்னங்குடா மகா வித்தியாலயத்தில்
கடந்த வெள்ளிக் கிழமை ஆரம்பமாகி
மூன்று நாட்கள் கொண்ட வதிவிட பயிற்சியாக இடம் பெற்றது. இதில் வலயப் பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆசிரிய குருளை சாரணர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வலயக் கல்வி பணிப்பாளர் யோ. ஜெயச்சந்திரன், பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ்.சஜீவன், தலைமையக சாரணர் ஆணையாளரும் பதில் மாவட்ட ஆணையாளருமான பி.சசிகுமார், உதவி தலைமை ஆணையாளர் திலக்மன் பத்மசிறி, சிரேஸ்ட கற்கைநெறி தேசிய தலைமை காரியாலய பயிற்றுவிப்பாளர்களான பி. அஜித்குமார், கே. பாரதி,
உதவி மாவட்ட சாரணர் ஆணையாளர் ஜெயக்காந்தன், சின்னங்களுக்கான இணைப்பாளர் ஜெயகரன்
மற்றும் வட மாகாணத்தில் இருந்து வருகை தந்த மாவட்ட சாரண உதவி ஆணையாளர்கள், சாரண பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments
tamil makal kural