பதுளை - மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெலுவ வாவியில் நீராடிக்கொண்டிருந்த நபரொருவர் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (10) மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார்.
இவர் நண்பர்களுடன் இணைந்து பண்டாரவளையிலிருந்து மஹியங்கனை நோக்கி சுற்றுலாவுக்கு சென்றுள்ள நிலையில் நெலுவ வாவியில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் நண்பர்களை அனைவரும் இணைந்து நீரில் மூழ்கியவரை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
tamil makal kural