மட்டு. கொக்கட்டிச்சோலை பகுதியில் எல் ஒ எல் சி நிதி நிறுவனத்தின் புதிய கிளை


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் எல் ஒ எல் சி நிதி நிறுவனத்தின் புதிய கிளை இன்று வெள்ளிக்கிழமை (11) திறந்து வைக்கப்பட்டது.

எல் ஒ எல் சி ( LOLC ) நிதி நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய பொறுப்பு அதிகாரி எவ். பார்த்திலோட், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் இளையதம்பி கிரேஸ்குமார்,  கிழக்கு பிராந்திய உதவி முகாமையாளர்களான பாயிஸ் மொகமட்,  ஆர். கெளதமன்,, டி. நிக்கலஸ் , மற்றும் கிழக்கு பிராந்திய ஙண்கடன் பிரிவு முகாமையாளர்கள் கிளை முகாமையாளர்கள், வாடிக்கையாளர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து

எல் .ஒ. எல் .சி நிதி நிறுவனம் பிரதேச மக்களின் நலன் கருதி தமது வாடிக்கையாளர் சேவையினை மட்டக்களப்பு மாவட்டத்தில் விரிவுபடுத்தும் நோக்குடன் கொக்கட்டிச்சோலை பகுதியில் இந்த புதிய கிளையினை திறந்துள்ளதாக கிளை முகாமையாளர தெரிவித்தார்.


இந்நிகழ்வின் போது தங்க கடன் சேவை,  வாகன லீசிங் சேவை போன்ற சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொண்டார்.


இங்கு சேவைகளை பெற வந்த வாடிக்கையாளர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப் பட்டது.











Post a Comment

0 Comments