மட்டக்களப்பு - பாலமீன்மடு வைத்தியசாலைக்கு வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் இலத்திரனியில் உபகரணங்கள் வழங்கிவைப்பு!
மட்டக்களப்பு பாலமீன்மடு வைத்தியசாலைக்கு வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் வைத்தியசாலைக்கு தேவைப்பாடாக இருந்த இலத்திரனியில் உபகரணங்கள் ஒரு தொகுதி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் உறுப்பினர் சிலரின் முயற்சியால் கொடையாளிகளின் நிதி பங்களிப்பிலும் பெறப்பட்ட சுமார் 2 லட்சம் பெறுமதியான இலத்திரனியில் உபகரணங்கள் பாலமீன்மடு வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் இனியன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இவ் உதவியினை ஆஞ்சநேயர் நிறுவனம், பாலமீன்மடு முதியோர் சங்கம், எஸ்.சந்திரகுமார், எஸ்.விவேகானந்தன் மற்றும் லயன்ஸ் கழகம் ஆகியோர் வழங்கியிருந்தனர்
இந்நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், தாதிய உத்தியோகத்தர் கலந்து கொண்டனர்.
0 Comments
tamil makal kural