இனவாதம் அற்ற ஆட்சியை முன்கொண்டு செல்லக்கூடியவர் சஜித் பிரேமதாஸ அவர்களே! - மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சோ. கணேசமூர்த்தி
வரதன் -
ஜனாதிபதி தேர்தலில் மூவின மக்களும் இம்முறை ஒன்றிணைந்து மாற்றத்தை நாட்டிலே ஏற்படுத்த வேண்டுமென தீர்மானித்துள்ளனர்.
அந்த அடிப்படையிலேயே எமது வேட்பாளரின் வெற்றிக்காக நாம் உழைத்துக் கொண்டிருக்கின்றோம் இந்த தேர்தலில் நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் ஒரு பாரிய மாற்றத்தினை ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர் என எமக்கு தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.
என
ஜக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சோ. கணேசமூர்த்தி தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இதன் வெற்றியை தடுப்பதற்கு சில தீய சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இனவாதமற்ற மூவின மக்களையும் அரவணைத்து கொண்டு செல்லக்கூடிய ஒரு தலைவருடன் நாம் இம்முறை இணைந்துள்ளோம். இனவாதம் மதவாதம் அற்ற ஒற்றுமையுடன் கூடிய ஒரு ஆட்சியை முன்கொண்டு செல்ல சஜித் பிரேமதாச திட்டமிட்டுள்ளார்.
இடம்பெறவுள்ள இந்த ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் 100 வீதமான வாக்குகளை அளித்து அவருக்கு பங்களிப்பை வழங்க வேண்டும். என அவர் தெரிவித்தார்.
0 Comments
tamil makal kural