பிரபாவின் ஈரோஸ் ஈழவர் ஜனநாயக முன்னணிக்குள் குழப்பம்! புதிய கட்சி உருவாகும் என்கிறார் உப தவிசாளர் திலிப்குமார்

 

பிரபாவின் ஈரோஸ் ஈழவர் ஜனநாயக முன்னணிக்குள் குழப்பம்! புதிய கட்சி உருவாகும் என்கிறார் உப தவிசாளர் திலிப்குமார் 





ஈரோஸ் ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக  அக்கட்சியின் பிரதி தலைவர் உள்ளிட்ட சிலர் கட்சியை விட்டு விலகி செல்லவுள்ளதாக உப தவிசாளர் ஜெம்ஸ் ந. திலிப்குமார் சனிக்கிழமை பிற்பகல் (28.09.2024)  மட்டக்களப்பில் வைத்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

கட்சியின் செயலாளர் இராஜநாதன் பிரபாகரனுக்கும் சில திருவாக உறுப்பினர்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டதன் விளைவாக கட்சியின் உப தவிசாளரும் மத்திய குழு உறுப்பினருமான ஜேம்ஸ் ந. திலிப்குமார் மற்றும் கட்சியின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் வேலுப்பிள்ளை நவரெட்ணம் உள்ளிட்ட சில உறுப்பினர்களும் குறித்த ஈரோஸ் ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சியை விட்டு விலகி தமது பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக தாம் ஒன்றினைந்து புதிய தொரு கட்சியை ஆரம்பித்து அதில் பயணிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

ஈரோஸ் ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் இராஜநாதன் பிரபாகரன் கட்சி தொடர்பாக தன்னிச்சையாக செயற்படுவதாகவும் இவர் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் உப தவிசாளரும் மத்திய குழு உறுப்பினருமான ந. திலிப்குமார்  மேலும் தெரிவித்தார்.


எதிர்வரும் நாட்களில் புத்திஜீவிகள், பல்கலை கழக மாணவர்களின் ஆலோசனைக்கு அமைவாக தாம்
ஒரு புதிய கட்சி ஒன்றினை உருவாக்கவுள்ளதாகவும் இவர் தெரிவித்தார்.



Post a Comment

0 Comments