தமிழ் பொதுவேட்பாளர் என்று ஒருவரை படம் காட்டியுள்ளார்கள். என்கிறார் சாணக்கியன் MP


தமிழ் பொதுவேட்பாளர் என்று ஒருவரை படம் காட்டியுள்ளார்கள்.   என்கிறார் சாணக்கியன் MP

க.ருத்திரன்

இந்த ஜனாதிபதி தேர்தலில் சரியான முடிவெடுத்து அறிவிப்போம். மக்கள் அதற்கான அங்கிகாரத்தை மக்கள் ஆதரவு தருவார்கள் அதனால் எதிர்வரும் 5 வருடத்திற்கு திடமான பலத்தை கொண்டுவரமுடியும். என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.


களுவன்கேணி சிங்கார தோப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்துக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மூன்று லட்சம் ரூபாய் ஏற்கனவே ஒதுக்கியிருந்த நிலையில் குறித்த பகுதி ஆலய நிர்வாகம் மற்றும் பொதுமக்களுடனான சந்திப்பு ஒன்று ஏற்பாடாகியிருந்தது . 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.


மீனவரிகளுடைய பிரச்சினை அவசியம் தீர்க்கப்பட வேண்டிய விடயம்  அதனை தீர்க்கவேண்டிய அமைச்சர்கள் அதனை தீர்ப்பதற்கு எந்தவொரு கரிசனையும் எடுக்கவில்லை. இந்த மீனவர்களின் பிரச்சிளையை தீர்க்கமால் அவர்களை ஜனாதிபதி தேர்தலுக்கு  பிரச்சார நடவக்கைக்கு மக்களை அனும்பும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக அறிந்தேன். மதிய உணவிற்கான டோக்கன்,ஒரு ரீ சேட், போக்குவரத்திற்கான காசு என்பன வழங்கப்பட்டுள்ளன. 

ஜனாதிபதி தேர்தலில் யாரும் கேட்க்கட்டும் நாங்கள் தமிழரசு கட்சி முடிவு  எடுக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கு களுவன்கேணியில் இருந்து ஒரு பஸ் தேவைப்படுகிறது. அவர்கள் கஸ்டப்பட்டாலும் பரவாயில்லை என்ற நிலைதான் காணப்படுகிறது.

மீனவர்களுடைய   பிரச்சினையை நாம் தான் பார்க்கவேண்டும். இது தான் இன்றைய நிலமை.

ஏறாவூரில் ஜனாதிபதி கூட்டத்துக்கு மீன்பிடி அமைச்சர் சீரியல் இலக்கம் கொடுத்து டோக்கன் கொடுத்து இருக்கின்றார்.

இந்த ஜனாதிபதி தேர்தல்தான் அடுத்த 5 வருடத்தை தீர்மானிக்கப்போகின்றது.இந்த தேர்தலில் நாங்கள் என்ன தீர்மானத்தை எடுக்கப் போகிறோம் என்பதுதான் எமது எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது. 2019 .இல் கோட்டாபாயவிற்கு வாக்களித்தால்தான் நாடு நல்ல இருக்கும் என் சிலர் இதே கிராமத்திற்கு வந்தார்கள். அவர்கள் இன்று இராஜாங்க அமைச்சர்களாக இருக்கிறார்கள்.அதே ஆட்கள் இன்று புதிதாக ஒருவரை கொண்டு வருகிறார்கள்.நாளைக்கு இந்னுமொருவரை கொண்டு வருவார்கள். நாங்கள் தமிழ் மக்களாகிய நாங்கள் இவர்களுடைய கருத்துக்களை எல்லாம்  கேட்க்கக் கூடாது. 

நாங்கள் என்ன தீர்மானம் எடுக்கின்றோமோ அதனுடதான் நாங்கள் இருக்க வேண்டும்.நாங்கள் சரியான பாதையை மக்களுக்கு காட்டுவோம்.

ஒரு ராஜாங்க அமைச்சரின் செயலாளர் லச்சம் வாங்கி சிறையில் உள்ளார்.

அதுபோன்று பிள்ளையானின் இணைப்பு செயலாளர் சிறையில்.

இதில் இந்னுமொரு  கோஷ்டி தமிழ் பொதுவேட்பாளர் என்று ஒருவரை படம் காட்டியுள்ளார்கள்.   

தமிழர்களின் எதிர்காலத்தை அழிக்கும் செயற்பாடகாக களம் இறக்குகிறார்கள்.

பொலிகண்டியிலிருந்து தேர்தல் ஆரம்பித்திருக்கின்றார்கள்.இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாக விடயங்கள். என்றார்




Post a Comment

0 Comments