ராஜபக்ஷ அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நபர்களே இப்போது ரணில் விக்கிரமசிங்க பக்கம் உள்ளனர். - ஐ. ம. ச. அமைப்பாளர் தயானந்தன்



ராஜபக்ஷ அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நபர்களே இப்போது ரணில் விக்கிரமசிங்க பக்கம் தாவி உள்ளனர். - 
ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் தயானந்தன் 

வவுணதீவு திருபர் எஸ்.சதீஸ்

வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதி மக்களும் சஜித் பிரேமதாஸ வை ஆதரித்து நிற்கின்றனர். ராஜபக்ஷ அரசாங்க ஆட்சியில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நபர்களே இப்போது ரணில் விக்கிரமசிங்க பக்கம் தாவியுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி பிரதம அமைப்பாளர் ரி. தயானந்தன் தெரிவித்தார்.


இன்று சனிக்கிழமை (31) அன்று ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி பிரதான காரியாலயத்தில் வைத்து ஊடகங்களுக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இக்கருத்தினை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஊழல்வாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் தலைவராக இப்போது ரணில் விக்கிரமசிங்க காணப் படுகின்றன. இவரது ஆட்சி இப்போது ரணில் ராஜபக்ச ஆட்சி என்றே எங்களுடைய மக்கள் கருதுகின்றனர். இவ்வாறான உண்மையை தென்னிலங்கை மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர்.

மொட்டு கட்சியில் இருந்து ஊழலற்ற, நேர்மையான நபர்களை மட்டுமே எமது சஜித் பிரேமதாஸ அழைத்துள்ளார்.


எதிர்கட்சியில் இருந்து கொண்டு இந்த நாட்டிலே பாடசாலைகளுக்கும் வைத்தியசாலைகளுக்கும், சாலை போக்குவரத்து சபைக்கும் பல உதவிகளை சஜித் பிரேமதாஸ செய்து கொண்டு வருகின்றார். இந்த நிலையில் இவர் ஜனாதிபதியானால் மேலும் பல அபிவிருத்திகளை முன்னெடுப்பார் என்பதில் ஐயமில்லை.

அரச ஊழியர்களுக்கும் விஷேட கவனம் செலுத்தப்படும் என்பதுடன் வறுமைப்பட்ட மக்களுக்கும் மாதாந்தம் 20.000/=  கொடுப்பனவு வழங்கப்படும் மற்றும் விவசாயிகளுக்கு மானிய உதவிகள் வழங்கப்படும்  போன்ற பல நல்ல விடயங்களை தேர்தல்  விஞ்ஞாபனத்திலே சஜித் பிரேமதாஸ தெளிவாக கூறியிருக்கின்றார். என தெரிவித்தார்.




Post a Comment

0 Comments