தமிழ் மக்களை வாழவைக்கப் போகின்றோம் என்ற வார்த்தை தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் : கலையரசன் MP !



அம்பாறையிலே நாங்கள் தமிழ் மக்களை வாழவைக்கப் போகின்றோம், காப்பாற்றப் போகின்றோம் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த வார்த்தைகள் தொடர்பில் மக்களும் இளைஞர்களுமே விழிப்பாக இருக்க வேண்டும். எமது மக்கள் 2020ல் விட்ட தவறை மீண்டும் செய்துவிடக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். 

 தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒருக்கீட்டின் மூலம் மல்வத்தை திருவள்ளுவர்புரம் கலைமகள் பாலர் பாடசாலைக்கான புதிய கட்டிடம். அமைப்பதற்காக 20இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேற்படி வேலைத்திட்ட அங்குரார்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்த்தார். 

 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பினும் ஆளுந்தரப்பு அல்ல. எமது மக்களின் பிரச்சனைகளை எங்களுக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் பலதரப்பட்ட இடங்களில் எடுத்துக் கூறியிருக்கின்றோம். கடந்த காலங்களில் எமது இனம் மிக மோசமாகப் பதிக்கப்பட்டடிருக்கின்றது. உயிர் ரீதியான, உடமை ரீதியான இழப்புகள் என பல்வேறு பட்ட இழப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளோம்.

 ஆகையால் நாங்கள் ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக இல்லாவிட்டாலும் எம்மால் முடிந்தளவு எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்திருக்கின்றோம். நாங்கள் இந்த நாட்டில் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு எமது சமூக ரீதியாக பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற ஒரு கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல்வாதி என்ற அடிப்படையில் எமக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற அநீதிகள் தொடர்பில் நாங்கள் பேசியே ஆக வேண்டும். என்ற கருத்தினை தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments