மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட
புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றில் நேற்று (06) இரவு பெருமளவு பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளன.
புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு பின்புறமாகவுள்ள வீடு ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய திருச்சடங்கு நடைபெற்றுவரும் நிலையில் வீட்டிலிருந்தவர்கள் வீடினை பூட்டி சாவியை வீட்டில் மறைத்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
வீட்டுக்குவந்து பார்த்தபோது வீட்டின் படுக்கையறையிலிருந்த அலுமாரி உடைக்கப்பட்டு அதிலிருந்த 17 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் நான்கரை பவுண் தங்க நகைகளும் திருடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த சிசிரிவி கமராவின் டிஸ்க்கும் காணாமல் போயுள்ளது.
வீட்டின் மதில் பகுதியினால் பாய்ந்துவந்து மறைத்து வைத்திருந்த சாவியைஎடுத்து வீட்டுக்குள் நுழைந்தே இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியில் பொலிஸ் பொறுப்பதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments
tamil makal kural