ருத்திரன் -
கோறளைப் பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரின் ஏற்பாட்டினால் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றிணைந்து உதவிக்கரம் நீட்டுவோம் என்ற தொனிப் பொருளில் பேரிடர் அனர்த்த நிவாரண சேகரிப்பு நடவடிக்கை பிரதேசம் தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
பிரதேசத்தில் பெரும்பலான மக்கள் நிவாரண உதவிகளை வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் கல்குடா வீதியில் பேத்தாழை நூலகத்திற்கு முன்பாக விவேகானந்தா சன சமூக நிலையம் பொது நூலகம் தாழை இளைஞர் கழகம் வாழச்சேனை வள்ளுவர் இளைஞர் கழகம் என்பன ஒன்றிணைந்து சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் வாழைச்னே பிரதான வீதியில் பிரதேச சபையும் சந்திவெளியில் ஸ்ரீ புதுப்பிள்ளையார் ஆலயம் மற்றும் எக்கோ விளையாட்டு கழகம் என்பன இணைந்து அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி வழங்கும் முகமாக நிவாரண சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரதேச மக்கள் முன் வந்து நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆர்வத்துடன் வழங்கி வருகின்றனர்




0 Comments
tamil makal kural