தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி

மட்டு. கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (11.10.2025) மாவீரர்களின் உறவுகளால் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

எதிர்வரும் கார்த்திகை-27 மாவீரர் தின நினைவு நாளை முன்னிட்டு இவ் சிரமதானப் பணி இன்றிலிருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தரவை துயிலும் இல்ல ஏற்பாட்டு குழவினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.இதன்போது மாவீரர் நினைவு துபியில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு இறந்த உறவுகளை நினைந்து அக வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து சிரமதானப் பணியினை ஆரம்பித்தனர்.

இவ் துயிலும் இல்லத்தினை காரணம் காட்டி உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் வசிக்கும் சிலர் பொதுமக்களிடம் பணம் வசூலித்து வருவதாகவும் அதற்கு மக்கள் இடமளிக்கக் கூடாது எனவும் நினைவு தினத்தை நினைவு கூறுவதற்குரிய பொருட்கள் மற்றும் உபகரணங்கள் தங்களிடம் உள்ளதாக ஏற்பாட்டு குழவினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். அத்துடன் இவ்வாறானவர்களிடம் அவதானமாக இருக்குமாறும் என்ன விடயம் என்றாலும் தங்களிடம் கேட்டு செயல்படுமாறும் அரசியல் பிரமுவர்களி இதனை அரசியல் ஆக்க வேண்டாம் என்றும் தற்போதைய அரசாங்கம் இம்முறை எவ்வித இடையூறுமின்றி யுத்தத்தில் உயிர் நீத்தவர்களின் நினைவு தினத்தை நினவு கூற அனுமதி வழங்குமாறும் இதன்போது தரவை துயிலும் இல்ல ஏற்பாட்டு குழவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

ருத்திரன் -









Post a Comment

0 Comments