கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் வயல் பகுதியில் இருந்து மிதிவெடி மீட்பு!


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் உள்ள அரசடி வயல் பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மிதிவெடி ஒன்று நேற்று திங்கட்கிழமை (20)  மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அரசடி நெற்களஞ்சியசாலைக்கு முன்னால் உள்ள வயல் நிலத்தை வேளாண்மை செய்கைக்காக நேற்று மாலை  உழுது பண்படுத்தி கொண்டிருந்தவர்கள் அங்கு புதைக்கப்பட்டிருந்த மிதிவெடி ஒன்றை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் வரவழைத்து குறித்த மிதிவெடியை வெடிக்க வைப்பதற்காக நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

0 Comments