திகிலிவெட்டை - சந்திவெளி ஸ்ரீ சிவ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவம்


திகிலிவெட்டை - சந்திவெளி ஸ்ரீ சிவ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ பெருவிழா!


க.ருத்திரன்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான குளத்துவெட்டை, திகிலிவெட்டை,சந்திவெளி ஸ்ரீ சிவ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 60வது வருடாந்த திருச்சடங்கு உற்சவ பெருவிழாவும் 11வது வருஷ அஸ்டோத்திர 108 சங்காபிஷேக பெருவிழாவும் இன்று 0.6.06.2024  திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.
எதிர்வரும் 11.06.2024 அன்று கன்னிமார் பூசை, தீ மிதித்தல்,அம்பாளின் திருக்குளிர்த்தி பூசையுடன் திருச்சடங்கு இனிதே நிறைவுபெறவுள்ளது.
குறித்த அம்மன் ஆலயமானது ஈழமணி திருநாட்டின் தட்சன கைலாயம் என போற்றப்படும் கிழக்கு மாகாணத்திலே மட்டுமா நகரிலே செந்நெல்லும்,பாலும்,தேனும்,பழமும் செழித்தோங்கும் புண்ணிய பூமியாம் குளத்துவெட்டை ஊர்தனிலே 3வது தலைமுறையாய் இருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.


நிகழும் மங்களகரமான குரோதி வருடம் வைகாசித திங்கள் 24 ஆம் நாளாகயி இன்று (6.6.2024.) வியாழக்கிழமை கூடி உள்ள அமாவாசை திதியும் ரோகினி நட்சத்திரமும் சித்தயோகமும் கூடி உள்ள சுபமுகூர்த்தவேளையில் திருக்கதவு திறத்தலுடன் உற்சவம் அரம்பமானது.


இன்றைய முதல் நாள் நிகழ்வானது ஆலயத்தின் கிழக்கே அமைந்துள்ள தள்ளானப்பிள்ளையார் ஆலயத்தின் விசேட பூசைகள் நடைபெற்று முன்பாக அமைந்துள்ள வாவிக்கரையில் இருந்து புனித நீரானது தேவாதிகளின் அருள் ஆசியுடன் எடுக்கப்பட்டு ஆலயம் வரும் வழியில் மக்களுக்கு அருளாசி வழங்கி ஆலயங்களை தரிசித்தும் கும்பி பாடலகள்; இசைக்க புனித நீர் ஆலயம் எடுத்துவரப்பட்டது.


ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்ட புனித நீர் ஆலயத்தை வந்தடைந்ததும் திருக்கதவு திறக்கப்பட்டது.
பின்னர் புனித நீரினைக் கொண்டு ஆலயம் சுத்தம் செய்யப்பட்டு 108 ஸ்த்தோத்திர சங்காபிஷேக நிகழ்வும் நடைபெற்றது.


ஆலயத்தில் தொடர்ந்து 5 நாட்கள் திருச்சடங்குகள் நடைறெவுள்ளன.
அனைவரும் வருகை தந்து அம்பாளின் பேரருளை பெற்றுச் செல்லுமாறு ஆலய பரிபலான சபையினர் கேட்டுக்கொள்கின்றனர். உற்சவ நிகழ்வுகள் யாவும் ஆலய பிரதம குருவும் ஆதின தர்மகர்த்தாவும் கிரியா வித்தகர் சிவாச்சாரியார திலகம் சிவஸ்ரீ செ.மகேந்திரக் குருக்களுடன் அலங்கார திலகம் சிவஸ்ரீ.த.லிங்கேஸ்வரக் குருக்கள் (யாழ்ப்பானம்) மற்றும்  உற்சவ கால பிரதம குரு மாந்திரிக பூசகர் சிவதிரு செ.கி.கிருபைரெத்தினம் ஆகியோர்கள்  கலந்து கொண்டு உற்சவ கால  திருச்சடங்குகளை நடாத்துவார்கள்.







Post a Comment

0 Comments