வாகரையில் மேற்கொள்ளப்படவிருக்கும் இறால் வளர்ப்பு திட்டம் தொடர்பாக பயணாளிகளைத் தெரிவு செய்யும் நேர்முகப் தேர்வினை நிறுத்துமாறு கோரி இன்று காலை கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.
உதவி மாவட்ட செயலாளர் குறித்த விடயம் தொடர்பாக தனது மேலதிகாரியான அரசாங்க அதிபரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியிருந்தார்.
மாவட்ட அரசாங்க அதிபர் இதனை நிறுத்தாமல் நேர்முகப் தேர்வினை நடாத்துமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.இதனை தொடர்ந்து பயணாளிகள் தெரிவு தொடர்பான நேர்முகத் தேர்வு நடவடிக்கை இடம்பெற்றது.இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய அரசாங்க அதிபருக்கு வழங்கப்பட்ட தகவலின் படி இன்று இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டப்பட்டதாக உதவி மாவட்ட செயலாளர் தெரிவித்திருந்தார்.
இவ் நடவடிக்கையினை ஏற்றுக்கொள்ளாத போராட்டக்காரர்கள் தமது நியாயமான கோரிக்கையை முன் வைத்து கண்டித்து இவ் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டனர்.
வாகரை பிரதேசத்தில் சுமார் 1500 ற்கும் மேற்பட்ட களப்பு காணிப் பரப்பில் இறால் வளர்ப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கு கடந்த பல வருடங்களாக பல்வேறு முயற்சிகள் இடம்பெற்று வருகிறது.பிரதேச மக்கள் விரும்பாத குறித்த திட்டத்தை நிறுத்துமாறு கோரி பல முறை கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தபோதிலும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மாவட்டத்தினை பிரதிநிதிதிதுவப் படுத்தும் இராஜாங்க அமைச்சர்கள் கவனத்தில் கொள்வதாகவில்லை என கவலை வெளியிட்டனர்
0 Comments
tamil makal kural