திகிலிவெட்டை, சிவ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 60வது வருடாந்த திருச்சடங்கு உற்சவம்

 


க.ருத்திரன்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான குளத்துவெட்டை, திகிலிவெட்டை, ஸ்ரீ சிவ முத்துமாரியம்மன் ஆலயத்தின்
60வது வருடாந்த திருச்சடங்கு உற்சவ பெருவிழா அண்மையில் தீ மிதித்தல்,அம்பாளின் திருக்குளிர்த்தி பூசையுடன் திருச்சடங்கு இனிதே நிறைவுபெற்றது.
11 வது  திருச்சடங்கு உற்சவமானது 108 சங்காபிஷேக பெருவிழா திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.தொடர்ந்து 5 நாட்க்கள் பூசை நிகழ்வுகள் யாவும் நடைபெற்றது.


உற்சவ காலங்களில் ஆலயத்தில் பல்வேறுபட்ட கலை கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றன.குறிப்பாக அருகி வரும் நாட்டுக் கூத்தினை மீண்டும் புத்துயிர் ஊட்டும் முகமாக ஆலய தர்மகர்த்தாவினால் பிரதேச பாடசாலை மாணவர்களைக் கொண்டு கண்டி ராசன் நாட்டுக் கூத்து அரங்கேற்றப்பட்டது.


உற்சவ நிகழ்வுகள் யாவும் ஆலய பிரதம குருவும் ஆதின தர்மகர்த்தாவும் கிரியா வித்தகர் சிவாச்சாரியார திலகம் சிவஸ்ரீ செ.மகேந்திரக் குருக்களுடன் அலங்கார திலகம் சிவஸ்ரீ.த.லிங்கேஸ்வரக் குருக்கள் (யாழ்ப்பானம்) மற்றும்  உற்சவ கால பிரதம குரு மாந்திரிக பூசகர் சிவதிரு செ.கி.கிருபைரெத்தினம் ஆகியோர்கள்  கலந்து கொண்டு உற்சவ கால திருச்சடங்குகளை நடாத்தினார்கள்.










Post a Comment

0 Comments