மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள மங்கிகட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ஒரு தொகுதி கற்றல், கற்பித்தல் உபகரணங்களுடன் அலுவலக பாவனைப் பொருட்கள் உள்ளிட்டவை
கனடா - லண்டன் இணைந்த கரங்கள் அமைப்பினால் திங்கட்கிழமை (01 ம் திகதி) வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி பாடசாலை நிருவாகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, பெளதீக வளப் பற்றாக்குறையுடன் இயங்கி வரும் இப்பாடசாலைக்கு இப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
கனடா, லண்டன் நாடுகளில் வாழும் உறவுகளின் நிதியுதவியில் இப்பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கியதாக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இங்கு தெரிவித்தார்.
மங்கிகட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் திருமதி ரி. சுதர்சன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் குகதாசன், பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் போது, அலுவலக கதிரைகள், தண்ணீர் பூ வாளிகள், சுவர் வர்ணங்கள், வெள்ளை எழுது பலகைகள், காகிதாதிகள் உள்ளிட்ட பல பொருட்கள் கனடா - லண்டன் இணைந்த கரங்கள் அமைப்பினால் நன்கொடையாக வழங்கப்பட்டது.
எஸ்.சதீஸ் -
0 Comments
tamil makal kural