,"ஜனாதிபதி பதவியில் இருந்து தம்மை வெளியேற்றிய சதி” என்ற பெயரில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு தாம் எதிர்கொண்ட சவால்கள் குறித்து இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
"இந்த புத்தகத்தின் உள்ளடக்கம், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை வெளிநாட்டு தரப்பினரின் தலையீடு மற்றும் இலங்கை சமூகத்தின் பல குறிப்பிட்ட பிரிவினரின் பங்கேற்புடன் தொடங்கப்பட்ட சதிகள் மற்றும் வன்முறை கிளர்ச்சிகள் மூலம் வெளியேற்றப்பட்ட கதை" என்று அதன் பின் அட்டையில் கூறப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் தகவல்கள் தெரிவிக்கின்றன
0 Comments
tamil makal kural