மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணப்படும் இறால் பண்ணைகளை தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் இன்று(10.02.2024) காலை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் பட்டிப்பளை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கு இடையிலாக ஒரு சங்கத்தினை கட்டி எழுப்ப வேண்டும் எனவும், இங்கு வழங்கப்படுகின்ற நிலத்தினை பயன்படுத்தி இறால் உற்பத்தியை செய்வதற்கு உரிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவது தொடர்பாகவும், வழங்கப்படுகின்ற நிலங்களை பெற்றுக்கொண்டு இறால் உற்பத்தியை செய்யாமல் இருக்கக் கூடாது எனவும் உரிய முறையில் இறால் உற்பத்தியை மேற்கொண்டு பலன்களை அடைய வேண்டும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
0 Comments
tamil makal kural