கரவெட்டியில் MGR இன் 107 பிறந்தநாள் விழாவில்



எஸ். சதீஸ் -


மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள கரவெட்டியில், தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 107ஆவது பிறந்தநாள் விழாவும் எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் ஏழாவது அண்டு நிறைவு நிகழ்வும் புதன்கிழமை 17ஆம் திகதி பிற்பகல் கரவெட்டியில்  நடைபெற்றது.  



மன்றத்தின் தலைவர் வேலாப்போடி கெங்காதரம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.



பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜி ராமச்சந்திரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது 107 பிறந்த நாள் வாழ்த்து பொறிக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.


தொடர்ந்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த 107 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும்  MGR நற்பணி மன்றமத்தால் வழங்கி வைக்கப்பட்டது









.

Post a Comment

0 Comments