வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு BUDS அமைப்பினால் 4ம் கட்ட நிவாரணப்பணி


மட்டக்களப்பில் அண்மையில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு ABI international campus  கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை (21 ம் திகதி) இடம்பெற்றது.

மட்டக்களப்பு வட்ஸ் அமைப்பின் ஒழுங்கமைப்பில், அவ் அமைப்பின்  தலைவர் என்.ஆர். டேவிட் தலைமையில் இந்நிவாரணப் பணி இடம் பெற்றது.


மட்டக்களப்பு மாவட்டத்தில்,  நான்காம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பாவற்கொடிச்சேனை, சத்துருகொண்டான் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செய்யப்பட்ட 62 குடும்பங்களுக்கு தலா  7000 ரூபா பெறுமதியான   இந்த நிவாரணப் பொதிகள், வட்ஸ் லண்டன் (BUDS UK ) அமைப்பின் நிதியுதவியில் வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் வட்ஸ் மட்டக்களப்பு  மாவட்ட செயலாளர் எஸ். சசிதரன் முன்னாள் தலைவர் கே. சத்தியநாதன், வஸ்ட் லண்டன் பிரதிநிதி விறிட்டோ ஜெயக்குமார் மற்றும் அமைப்பின் மாவட்ட பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.














Post a Comment

0 Comments