வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வட்ஸ் (BUDS) அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு




எஸ்.சதீஸ் -

மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வட்ஸ் எனப்படும் மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நொச்சிமுனை பல நோக்கு கட்டிடத்தில் இன்று (14.01.2024 அன்று) இடம்பெற்றது.

சமூக செயற்பாட்டாளர் கீர்த்தனா கிரிஸ்டி ஒழுங்கமைப்பில் வட்ஸ் மட்டக்களப்பு அமைப்பின் தலைவர் என்.ஆர். டேவிட் தலைமையில் இந் நிவாரணப் பணி இடம் பெற்றது.


இதன்போது முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 75 குடும்பங்களுக்கு நொச்சிமுனை மற்றும் மாவிலங்குதுறை பகுதியைச் சேர்ந்த குடும்பங்களுக்கு  இந்த நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டது.

கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள், வாழ்வாதார உதவி போன்றவற்றுக்கு மேலாக வட்ஸ் (BUDS) அமைப்பு தற்போது மட்டக்களப்பு, வாகரை போன்ற பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கிவருவதாக இவ் அமைப்பின்  மாவட்ட செயலாளர் எஸ். சசிதரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்கள், வட்ஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் கே. சத்தியநாதன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம மட்டஅமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.








Post a Comment

0 Comments