சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை வைத்திருப்பவர்கள் பற்றிய தகவல்களை வழங்கும் நபர்களுக்கு பணப் பரிசு வழங்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது பலரும் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தகவல் வழங்கும் நபர்களுக்கும் பண பரிசில் வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இவ்வாறு தகவல் வழங்குவோர் பற்றிய விபரங்கள் இரகசியமாக பேணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
tamil makal kural