மட்டக்களப்பு, நெடுஞ்சேனை கிராமத்தில் வீடு கையளிப்பு

நெடுஞ்சேனை கிராமத்தில் வீடு கையளிப்பு


எஸ். சதீஸ் - 

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச  செயலக பிரிவில்  நெடுஞ்சேனை கிராமத்தில், பகிரதன் குடும்பத்தின் அனுசரணையில் பரததர்சனா அறப்பணி நிதியத்தினால் அமைக்கப்பட்ட வீடு பயனாளிக்கு நேற்று (24) கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி. நமசிவாயம் சத்தியானந்தி கலந்துகொண்டார்.

நெடுஞ்சேனை கிராமத்தில் மிகவும் நெருக்கடியான நிலையில் வீட்டுவசதி இல்லாமல் வாழ்ந்து வந்த தெரிவு  செய்யப்பட்ட ஒரு குடும்பத்திற்கு இவ்வீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் போது,  பரததர்சனா அறப்பணி நிதிய தலைவர் த. கேசவநாதன், செயலாளர் வ. திலீபன் மற்றும் அறப்பணியாளர்கள,  பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.






Post a Comment

0 Comments