எஸ். சதீஸ்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்திலுள்ள முறக்கொட்டான்சேனை இ.கி.மி.வித்தியாலத்தில் கல்வி கற்ற 1995ம் ஆண்டு க.பொ.த (சா/தர) பிரிவு பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இவ்வருடம் தரம் 5 புலமை பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான விஷேட கற்றல் செயற்திட்டம் 20ம் திகதி சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2024 இல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் முகமாக இந்த விசேட கற்றல் கற்பித்தல் செயற்திட்டம் பாடசாலை விஞ்ஞான ஆய்வுகூடக் கட்டிடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு பாடசாலையின் அதிபர் ம. தவனேஸ்வரன், பழைய மாணவர் பிரிவின் தலைவர் க.கமலேஸ்வரன், ஒருங்கிணைப்பாளரான கு.சுபகாந்தன், திட்ட ஒழுங்கமைப்பாளர் சோ.புலேந்திரன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திருமதி லோஜினி ஜெகநாதன், இத்திட்டத்திற்குரிய பொறுப்பு ஆசிரியை திருமதி மதி ஜெயராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments
tamil makal kural