நோட்டோ உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதியில் தீவிர சுனாமி எச்சரிக்கை முன்னதாக விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதனை ‘சுனாமி எச்சரிக்கை’ என ஜப்பான் அரசு தளர்த்தியுள்ளது.
நீகாட்டா மற்றும் டோயாமா போன்ற நகரங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இஷிகாவா நகரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 32,500 வீடுகளில் மின் தடை ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோளிட்டு கியோடோ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இங்குள்ள பல வீடுகள் நிலநடுக்கத்தால் இடிந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனிடையே தென்கொரியாவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதியிலும் சிறியளவில் சுனாமி அலைகள் எழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
43 செமீ (1.4 அடி) உயரம் கொண்ட சுனாமி அலை கிழக்கு மாகாணமான கேங்வோனை அடைந்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் கூறுகிறது.
கடல் மட்டம் உயரும் என்ற அச்சத்தின் காரணமாக உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு முன்னதாக அதிகாரிகள் இந்த மாகாணத்தில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்
முன்னதாக, ஜப்பானின் மேற்கு கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் மத்திய கடற்கரை பிராந்தியமான இஷிகவாவை மையமாக கொண்டு 7.6 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
"இந்தப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும்" என்று என்.எச்.கே. என்ற ஜப்பானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் நோட்டோ பகுதியின் கடற்கரை பகுதியில் உள்ள மக்களை "உயரமான பகுதிகளுக்கு உடனடியாக செல்லுமாறு" இஷிகவா அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
5 மீட்டர் (சுமார் 16 அடி) உயரமுள்ள அலைகள் நோட்டோ பகுதியை நோக்கி வந்துள்ளதாக ஜப்பானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
0 Comments
tamil makal kural