பெண்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளையும் பொருளாதார கல்வி சுகாதார மனப்பாங்குப் பிரச்சினைகளையும் இல்லாதொழிக்க வேண்டும் மாவட்டச் செயலாளர் நந்தன கலபொட

 

 பெண்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளையும்  பொருளாதார கல்வி சுகாதார மனப்பாங்குப் பிரச்சினைகளையும் இல்லாதொழிக்க வேண்டும் -

மாவட்டச் செயலாளர் நந்தன கலபொட




.எச்.ஹுஸைன்

இந்த நாட்டிலே பெண்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளையும் பொதுவாக இருக்கின்ற பொருளாதார கல்வி சுகாதார மனப்பாங்குப் பிரச்சினைகளையும் இல்லாதொழிக்க வேண்டும் என நுவரெலியா மாவட்டச் செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்திலிருந்து மாவட்ட பெண்கள் செயலணியினரின் திருகோணமலைக்கான பரஸ்பர நட்புறவுடனான அனுபவப் பகிர்வு கற்றல் கள விஜயம் சனி ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும்  இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் .எஸ்அருள்ராஜ் தலைமையில் இடம்பெற்ற வரவேற்பு அறிமுக நிகழ்வில் நுவரெலியா மாவட்டச் செயலாளர் உரையாற்றினார்.

திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகங்களின் ஒத்துழைப்புடன்  சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் இந்த கற்றல் அனுபவப் பகிர்வு கள விஜயத்தை ஏற்பாடு செய்திருந்தது.

அங்கு நிகழ்வில் பெண்கள் செயற்பாட்டாளர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய நுவரெலியா மாவட்டச் செயலாளர் நந்தன கலபொட,

இந்த நாட்டிலே பொருளாதாரப் பிரச்சினைதான் பிரதானமாக இருக்கின்றது.

அடுத்தபடியாக கல்வி சுகாதாரம் மனித மனப்பாங்கு சம்பந்தமான பிரச்சினைகள் இருக்கின்றனஇவை எல்லாவற்றுக்கும் நாங்கள் தீர்வுகளைக் காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்இந்த நாட்டிலே இனமத பேதம் இல்லாமல் எதிர்கால சந்ததிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்அதன் மூலம் நற்பிரஜைகளை உருவாக்க வேண்டும்.”  என்றார்.

நிகழ்வில் உரையாற்றிய இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ரீதிலீப்குமார்மாகாண மட்டத்தில் பெண்களை வலுவூட்டுவதற்கான செயற்திட்டங்களை நாம் அமுல்படுத்தி வருகின்றோம்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாரபட்சங்களையும் இல்லாமலாக்கி பெண்களை ஆளுமை மிக்கவர்களாக வலுவூட்டுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

அதன் அடிப்படையாக பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மாவட்ட செயலக மட்டத்திலும் மகளிர் செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.  பெண்களை வலுப்படுத்தும் வகையில் பயிற்சிகள்செயலமர்வுகள்விழிப்புணர்வுகள்தொழில்துறை உற்பத்திக் கண்காட்சிகள்கற்றல் கள விஜயங்கள்பொருளாதார வாழ்வாதார உதவு ஊக்கங்கள் கிரமமாக இடம்பெற்று வருகின்றன.

இதனோடு இணைந்ததாக சட்டமும்   ஒழுங்கும் அமுலாக்கல்;, பொறிமுறைகள்வழிகாட்டல்கள்வழிகாட்டிக் கோவைகள் பரிந்துரைப்புகள் என்பனவும் இடம்பெறுகின்றன.

பிரதேசமாவட்ட செயலணிகள் மூலம் பெண்கள் சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் துன்புறுத்தல்கள்வன்முறைகள்துஷ்பிரயோகங்கள்கொடுமைப்படுத்தல்கள்சித்திரவதைகள்சுரண்டல்கள்உரிமை மீறல்கள்இளவயதுத் திருமணம்போன்ற  பல்வகைப் பாதிப்புக்;கள் நிகழ்வதைத் தடுக்கக் கூடிய பொறிமுறைகள் என்பனவற்றை செயற்பாட்டில் கொண்டுவர ஊக்கமளிக்கப்படுகின்றது என்றார்.

நுவரெலியா மாவட்ட செயலாளர் தலைமையிலான பெண்கள் செயலணியினர் திருகோணமலை மாவட்டத்தின் இறால்குழிமூதூர்வெருகல்கல்லடி ஆகிய பிரதேசங்களுக்கும் கள விஜயத்தை மேற்கொண்டு அப்பகுதிகளில் இடம்பெறும் பெண்கள் செயலணியினரின் செயற்பாடுகளையும் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வுகளில் திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்ட பெண்கள் அபிவிருத்தி அலுவலர்களான சுவர்ணா தீபானிரசிக்கா ஜயசிங்ஹபாம் பௌண்டேஷன் நிறுவனத்தின் பிரதி குழுத் தலைவர் சந்திமா அபேவிக்கிரம உள்ளிட்டடோரும் இவ்விரு மாவட்டங்களின் பெண்கள் அபிவிருத்தி அலுவலர்களும் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் பணியாளர்கள் ஆகியோரும்  இணைந்து கொண்டனர்.








Post a Comment

0 Comments