பாடசாலை ஒன்றில் போதைப்பொருள் புகைத்த இரு ஆசிரியர்கள் கைது!

 


பிரபல பாடசாலை ஒன்றில் கடமை நேரத்தில் போதைப்பொருள் (கஞ்சா) புகைத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ள உள்ள சம்பவம் வெலிமடையில் பதிவாகியுள்ளது.

அவர்கள் சங்கீத வகுப்பறையில் கஞ்சா போதைப்பொருளை புகைத்துக்கொண்டிருந்தபோது அவர்களை பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர்.

இரகசிய தகவலாளரின் தகவலின் அடிப்படையில் கைது செய்யப்படும் போது சந்தேகநபர்கள் 1.9 கிராம் போதைப்பொருனை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பத் அபேவிக்ரமின் தலைமையிலான பொலிஸ் குழு இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று வெலிமடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


Post a Comment

0 Comments