உள்ளுர் அறிவின் நீட்சி ஏட்டண்ணாவியார் செ.சிவநாயகம் - அஞ்சலிக் குறிப்பு.
பாரம்பரிய அறிவு பல முதுசங்களை ஆளுமைகளை உருவாக்கி வருகின்றது. இதன் முக்கிய அம்சமும் இதுவாகவே உள்ளது. சூழலை புரிதலும் அதனைக் கற்றலும் இதன் அடிப்படையாகும். இத்தகைய பாரம்பரிய அறிவுமுறையில் உருவாகியவரே ஏட்டண்ணாவியார் செ.சிவநாயகம் ஆவார். இவர் ஏறாவூரினை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு சீலாமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர். கூத்துமீளுருவாக்கச் செயற்பாடுகளில் இணைந்து செயற்;பட்டதோடு தொடர்ந்து மீளுருவாக்கக் கூத்துக்களை எழுதி வந்தவராவார். வடமோடிக் கூத்தாளுமைகளின் முக்கிய முதுசமான சிவநாயகம் மாமா 14.11.2023 அன்று காலை தனது 75அகவையில் இயற்கையில் பகுதியாய் தன்வாழ்தலை நிறைவுசெய்துள்ளார். #
சீலாமுனை கூத்தின் தொடர்ச்சியாய் நீண்ட காலத்தின் பின்னர் வடமோடிக் கூத்தினை மீண்டும் ஆடுவதற்கு துணைநின்றவர். அவரும் அவரது வீடும் மாணவர்களின் கற்றலுக்கான தளம். எப்போதும் எதுபற்றிப் பேசவும் ஆயத்தமாகியே இருப்பவர். பல்தளத்திலும் செயற்படும் ஆளுமையாக அதிகார கருத்தாடல்களை விளங்கி கொள்பவராக அவற்றுக்கெதிராகச் செயற்;படு;பவராக இருந்தவர். இவரது எழுத்துக்களும் மீளுருவாக்க கூத்துக்களும் இதற்கான சாண்றாதாரமாக உள்ளன. சமூக சாதிய அரசியல் நோக்கில் பெண்ணிலை வாத நோக்கில் இதிகாச புராணங்களை அணுகுதல் அதிகாரத்திற்கான மாற்று வாசிப்பு செய்தல் போன்றவைகளை தன்னில் தன் எழுத்துக்களில் ஏற்படுத்திக் கொண்டவர். ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்கும் கலந்துரையாடல்களை ஏற்படுத்தும் இவரது செயற்பாட்டுத் தன்மை என்பது முக்கியமானது. தனி மனிதராக மட்டுமின்றி இச்சமூகத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளிலும் இயங்கி செயற்படக்கூடியவர்
இயல்பான ஆழமான மனிதர் அவர். இவர் எழுதும் வடமோடிக் மீளுருவாக்கக் கூத்துப் பனுவல்கள் எப்போதும் எல்லோருக்குமான உரையாடல்களாக அமையும். அவரது பனுவல்களை வாசித்து உரையாடுவதற்கான தளங்களைக் கொண்டதாக அவரது எழுத்துக்;கள் காணப்படும். பல்தன்மையான கருத்துக்களை எழுத்துக்களில் காணலாம். ஏட்டண்ணாவியராக மட்டுமில்லாது கட்டுரையாளராகவும் பாடலாசியராகவும் சடங்குச்;சூழலிலும் தன்னை இணைத்துக் கொண்டவர். மாணவர்களுக்கான ஆய்வுப் பொருளாக அவர் செயற்பாடுகளுள்ளன. அவரும் அவர் வீடும் மற்றொரு கல்விக்கூடமாய் செயற்ப்பட்டது. தன் அறிவினை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தவர். அவர் மனைவி அவருக்கான பக்கபலமாய் செயற்பட்டவர். சிவநாயகம் என்னும் ஆளுமை பல்தளங்களில் நிலைநிறுத்திக் கொள்ள பக்கபலமாய் நின்று செயற்பட்டவர் அவர் துணைவியாராவார்.
இன்றைய கல்விச் சூழல் உருவாக்க மறந்த பல ஆளுமைகளை பாரம்பரிய அறி;வுமுறை உருவாக்கியுள்ளது. அவ்வாறு உருவாக்கியவருள் ஒருவர்தான் செ.சிவநாயகம் ஆவார். எங்களுடன் தொடர்ந்து பயணித்த சிவநாயகம் மாமாவினை இழப்பின் துயரிடை, அவருடன் இணைந்து பகிர்ந்த மகிழ்வுடனும் துயரும் மனத்தோடும் நின்று வழிஅனுப்பி வைக்கின்றோம். அவர் அறிவின் தொடர்ச்சி எங்களுடன் பயணிக்கும்.
கலாவதி கலைமகள்
0 Comments
tamil makal kural