மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவர முயற்சிப்பதன் காரணத்தினால் தன் மீது ஆயுதம் தாங்கிய அடையாளம் தெரியாத சிலர் உயிரச்சுறுத்தல் விடுத்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர் லவக்குமார் தெரிவித்துள்ளார்.
தனக்கு உயிரச்சுறுத்தல் விடுத்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பில் நேற்று(03.10.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், ''தீவுச்சேனை என்பது மறைக்கப்பட்ட விடயம். அதை கதைப்பதற்கு நீங்கள் எத்தனிக்க கூடாது. அதனை நீங்கள் செய்தது பிழை. இன்றைய நாளில் உங்களை கொலை செய்யவே வந்தோம். ஆனால் முதலாவதாக உங்களை எச்சரிக்கின்றோம்'' என தான் அச்சுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தன்னை அச்சுறுத்துவதற்காக வருகைதந்த 6 பேரில், இருவரின் கைகளில் AK 47 ரக துப்பாக்கிகளும், ஏனையவர்களிடத்தில் வேறு துப்பாக்கிகளையும் வைத்திருந்தனர் என லவக்குமார் கூறியுள்ளார்.
0 Comments
tamil makal kural